my home

Powered By Blogger

Friday, 18 November 2011

ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.





ஐஸ்வர்யா ராய்க்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை அப்படியே அம்மாவைப் போல உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஸ்வர்யாவுக்கு உள்ளதைப் போலவே ஓவியம் போன்ற அழகிய கண்களாம் குழந்தைக்கு.
முதலில் சிசேரியன் பண்ணுவதாகத்தான் டாக்டர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஐஸ்வர்யாதான்,அதெல்லாம் வேண்டாம், சுகப் பிரசவமாகவே இருக்கட்டும் என்று கூறி விட்டாராம். இதனால் சுகப் பிரசவமாகவே தனது முதல் மகளைப் பெற்றெடுத்துள்ளார் ஐஸ்வர்யா. பிரசவத்தின்போது அவர் மிகவும் மனோ திடத்துடன் இருந்ததை தங்களது பிளாக்குகள் மூலம் கணவர் அபிஷேக் பச்சனும், மாமனார் அமிதாப் பச்சனும் உருகி உருகி எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், குட்டிப் பாப்பாவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற ஆலோசனைகள் பச்சன் வீட்டில் சூடு பிடித்துள்ளதாம். இருப்பினும் தற்போதைக்கு பேட்டி பி என்று செல்லமாக பெயரிட்டுள்ளனராம்.
இதற்கிடையே, ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமிதாப் பச்சன் இருவரும் விரைவில் வீடு திரும்ப தயாராகி வருவதாக தனது பிளாக்கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தாயும், மகளும் மிக மிக நன்றாக உள்ளனர். விரைவில் வீடு திரும்புவார்கள் என்று கூறியுள்ள அமிதாப் தனது ஸ்டைலில், ஷோலே படப்பிடிப்பின்போது ஜெயாபாதுரியும் கூட கர்ப்பமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது பேத்தியுடன் ஒரு நாளை செலவிட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார் அமிதாப். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் முழுக்க அந்தக் குட்டிக் குழந்தையுடன் இருந்தேன். அதன் அசைவுகளை வேடிக்கை பார்ப்பதே சுவாரஸ்யமானது. மிகவும் அமைதியான குழந்தை. அதற்காகவே பிரத்யேகமாக வாங்கப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான உடையில் அழகாக படுத்திருந்தது. கண்களை எப்போதும் மூடியே வைத்திருக்கிறாள். எப்போதாவது திறக்கிறாள். லேசான புன்னைகையும் கூட அவ்வப்போது வருகிறது. இந்தப் புதிய உலகம் குறித்த கனவோ, என்னவோ என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

Wednesday, 16 November 2011

Saturday, 12 November 2011

amazing song


Fish crocodile head






கணவாய்களை உயிரோடு உண்ணும் வித்திர மனிதர்கள்




Eating Live Octopus

கணவாய்களை உயிரோடு உண்ணும் வித்திர மனிதர்கள்




சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்!




இந்தியாவின் பல்வேறுபட்ட தமிழ்ப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைச் சிறுவன் மூலம் திருட வைத்துப் பிழைப்பு நடத்துகின்றனர் இந்தியப் பொலிஸார்.இதில் வேடிக்கை என்னவெனில், வாகனம் இறுதியில் உரிமையாளரிடமே போய்ச் சேருகின்றது என்பதுதான்.


சிறுவனை வைத்துத் திருட்டுத் தொழில் செய்யும் பொலிஸார்!





Friday, 11 November 2011


இந்த சிலைகளை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா?


Tuesday, 8 November 2011

Friday, 4 November 2011

Saturday, 29 October 2011

7ஆம் அறிவு - தமிழனின் மிடுக்கான வரலாற்றுப் பதிவு!
புதைந்து கிடந்த தமிழனின் வரலாற்று உண்மையை சொல்லும் படம்.







Tuesday, 25 October 2011

DEAR  viewers HAPPY DEEPAWALI

DEAR  viewers HAPPY DEEPAWALI.....



Monday, 24 October 2011

KADAVUL Thantha

Best Tamil Motivational Video


உங்களுக்கு ஒரு கேள்வி





Oru Naalil Valkai Engum Odathu




An amazing voice tells about LIFE!








Sunday, 23 October 2011

Animal Allies 113

ஜெயம்’ ராஜாவின் லேட்டஸ்ட் டென்ஷன்! – ஆயிரம் அறிவு – ரா-100 வந்தாலும் வேலாயுதம் வெற்றிபெறும்



மகள் வர்ணிகாவையும் அழைத்துக் கொண்டு பிரஸ்சை மீட் பண்ண வந்திருந்தார் ‘ஜெயம்’ ராஜா. இந்த தீபாவளி வழக்கத்தை போல இல்லாமல் இந்த முறை ரொம்ப விசேஷமோ விசேஷம். இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த தீபாவளிக்கு விஜய் என்ற மாஸ் முதலைக்கு ரீல் ரீலாக தீனி போட்டிருக்கிறாரல்லவா? அந்த சந்தோஷம்தான் முகத்தில் தாண்டவமாடியது! ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கப் போனா அங்க கேட்கிறான், சார் இந்த வருஷம் [...]


ஷங்கரை முந்திய முருகதாஸ்!


வியாபார விஷயத்தில் ‘எந்திரனை’ தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த ’7ஆம் அறிவு’, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். ‘எந்திரன்’ படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாஸூம் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து [...]


பருப்பான அக்காவின் பொறுப்பான பதில்!


ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு தமிழில். இதை அப்படியே மூக்கை அடைத்துக் கொண்டு மொழி பெயர்த்தால் மலையாள பழமொழியாகிவிடும். ஆறு தங்கைகளுடன் பிறந்த பூர்ணாவின் குடும்பம் இப்போது சகல சந்தோஷத்தோடு இருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான். படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்தவர். இதை விஷுவலாக பார்த்துவிட்டுதான் படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது. இதெல்லாம் பழங்கதை. தனது ஐந்து தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை [...]




நட்ட நடு ஆத்துல சட்டையெல்லாம் ஈரமாக்கி நிற்க வைப்பார்கள் ஹீரோவையும் ஹீரோயினையும். பாடல் காட்சிகளில் இப்படி நிற்கும் ஜோடிகளுக்கு நீச்சல் தெரியுமா என்று டான்ஸ் மாஸ்டர்களும் கேட்பதில்லை. வெட்கப்பட்டுக் கொண்டு ஹீரோக்களும் சொல்வதில்லை. தண்ணீ­ரில் தவறி விழுந்து, நாக்கு மூக்கெல்லாம் புரையேறி பியூஸ் ஆன ஏராளமான ஹீரோக்களை எனக்கு தெரியும் என்று சிரித்தார் அந்த பெயர் சொல்ல விரும்பாத டான்ஸ் மாஸ்டர். இவர்களை போன்ற மாஸ்டர்களின் மைண்ட் வாய்ஸ் இனி எடுபடாது. நடிகைகளில் பலர் நீச்சல் தெரிந்தவர்களாக [...]

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தீபாவளி பண்டிகை முதல் 26.10.11-ல் இருந்து 1.11.2001 வரை 7 நாட்களுக்கு தியேட்டர்களில் காலை காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அந்த பண்டிகை நாளில் சினிமா பார்த்து மகிழ வேண்டும் என்பது [...]

விஜய்யின் வேலாயுதம் படத்தை டைரக்டு செய்த ஏ.ராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். வேலாயுதம் படத்தை ஒரு மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன். என் தம்பி ஜெயம்ரவியை வச்சிதான் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். [...]

‘மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெங்கட்பிரபு STUDIO GREEN நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. இந்நிறுவனம் இதுவரை சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரை வைத்து தான் படம் தயாரித்துள்ளது. வெங்கட்பிரபு அடுத்த படத்தின் நாயகனாக சூர்யா நடிக்க இருக்கிறாராம். ‘மங்காத்தா’ படத்தில் அஜீத்தின் நடிப்பைப் பாராட்டியுள்ள சூர்யா, அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதைத் தெரிவித்திருந்தார். சூர்யாவின் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு, அங்கும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், [...]

நீயா நானா என்று விஜய் தரப்பும், சூர்யா தரப்பும் வாய் சவடால்கள் விட்டுக்கொண்டுருக்க, அமளிதுமளியான ஒரு தீபாவளியை திரையரங்குகள் சந்திக்கப் போவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் உதநிதி ஸ்டாலீன் முந்திக்கொண்டதால், அவருக்கு ஆயிரத்து நூறு திரையரங்குகள்(1100) தமிழ்நாடு முழுவதும் கிடைத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி வேலாயுததுக்கு 600 திரையரங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதேபோல தியேட்டர் விஷயத்தில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் 7-ஆம் அறிவின் ஆதிக்கமே மேலோங்கியிருகிறது. கனடாவில் 40 மாநிலங்களில் 7ஆம் அறிவு படத்தை தலா இரண்டு [...]

லகான் படத்தின் மூலம் இந்திய சினிமாவை ஆஸ்கர்வரை எடுத்துச் சென்றவர் தரமான சினிமாவை நேசிக்கும் பாலிவுட்டின் முன்னனி ஹீரோவான அமீர்கான். லாகனுக்கு பிறகு தொடர்ந்து தரமான படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார் அமீர். இப்படி இந்த ஆண்டில் இவர் தயாரித்த இரண்டு முக்கியமான படங்கள் ‘தோபி கேட்’ மற்றும் டெல்லி பெல்லி ஆகிய படங்கள். தோபிகேட்டை அமீர்கானின் மனைவியே இயக்கியிருந்தார். முழுநீள நகைசுவைப் படமான டெல்லி பெல்லி பாலிவுட் ரசிகர்களையும் தாண்டி அனைத்து மொழி ரசிகர்களின் பாராட்டையும் [...]

பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்கா பறக்க இருக்கிறது முப்பொழுதும் உன் கற்பனைகள் படக்குழு. ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில், பிரம்மாண்டமாக தயாராகும் படம் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”. இப்படத்தின் நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் மகன் நடிக்கிறார். “பானா காத்தாடி” படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். படத்தில் அதார்வாவுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்கா செல்ல இருக்கிறது முப்பொழும் உன் கற்பனைகள் [...]

படம் வெளியாகும் முன்பே காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளது ஷாரூக்கானின் ரா ஒன். ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப் படம் ரா ஒன். இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் காப்பிரைட் பிரச்சினையில் சிக்கியுள்ளது. ரா ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் [...]

இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பது நல்ல அனுபவம்தான் என்றார் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் டாப்ஸி, கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் இயக்குனர்தான் ஹீரோயின்களை தேர்வு செய்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கேரக்டருக்கு யார் பொருந்துவார் என்பதை அவர்தான் முடிவு செய்கிறார். அதனால் இப்படி நடித்திருக்கலாமே, அதை செய்திருக்கலாமே என்று கூறுவது நான் பொருட்படுத்தமாட்டேன். தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர, உடன் நடிப்பது எத்தனை [...]

ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது: சினிமா [...]

சென்னையில் சர்வதேச பட விழாவை தொடங்கி வைத்த டைரக்டர் வசந்தபாலன், சர்வதேச படங்களை பார்த்ததால்தான் தன்னால் வெற்றி இயக்குனர் ஆக முடிந்தது என்று கூறினார். செவன்த்சேனல் நிறுவனமும், தமிழ் பிலிம் அகடாமியும் இணைந்து சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச பட விழாவை நடத்தி வருகின்றன. 8வது ஆண்டாக சர்வதேச பட விழா, சென்னையில் தொடங்கியது. தொடக்க விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் வசந்தபாலன் கலந்து கொண்டு சர்வதேச பட விழாவை [...]

‘அரட்டை வித் ஆர்யா… ஓ.கே-யா?’- சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி மாணவிகளுக்கு மெசேஜ் தட்டினால், ‘ஓஓஓஓஓகேய்…’ என்று எக்ஸ்பிரஸ் ரிப்ளை. இந்தப் பக்கம் ஆர்யாவுக்கு மெசேஜ் தட்டினால், ‘நண்பேன்டா.’ என்று மின்னல் ரிப்ளை. இனி ஓவர் டு தித்திப்பு மத்தாப்பூ சந்திப்பு! டி-ஷர்ட்டுக்கு மேட்ச்சான சிவப்பு நிற ‘ஐ 20’ காரில் வந்து இறங்கிய ஆர்யாவை, அப்படியே வகுப்பறைக்குக் கடத்திச் சென்று பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள் ‘சின்சியர்’ மாணவிகள்! ‘டெபிட், கிரெடிட்’ என்று போர்டில் ரூபல் கணக்கு [...]

Friday, 21 October 2011

மகளிர் அழகு குறிப்புகள்-Tamil Beauty Tips



-

Tamil Beauty Tips  

மகளிர் அழகு குறிப்புகள்


நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்­ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
- கேரள பெண்கள் ஏன் கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார்கள் என்பதற்கான காரணம் இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே...


அழகு குறிப்புகள்:அழகு தரும் ஆப்பிள்! ,,,,


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரையே அணுக அவசியமில்லைங்கிறது ஆங்கில பழமொழி. ஆனால் ஆப்பிள் ஒரு அழகுக்கலை நிபுணரையே உள்ளே அடக்கியிருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் அழகுமொழி...........! 


* சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.
* ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.
* ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.
  1. * ஆப்பிள் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் மென்மையாகும்,,,,

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ.....!

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..!
* வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை வகைகள், விதைவகைகளான வேர்க்கடலை மொச்சைப் பயறு வகைகளை அழகிய உணவு வகைகளாக உங்கள் அன்றாட உணவில் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மேனி முதுமைச் சுருக்கமின்றி இளமையுடன் திகழும்!
* உங்கள் உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் ஹை டென்ஸிட்டி லைபோபுரோட்டீன் (ஹெச்.டி.எல்) சத்து நிறைந்த ஆலிவ் எண்ணெய் உங்கள் மேனியை உலர விடாமல் ஈரப்பசையுடன் மின்னிப்பிரகாசிக்கச் செய்யும்!
* ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து, வைட்டமின் பி 12, புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மீன் மற்றும் மீன் எண்ணெய் அழகிய உணவு வகைகளில் முதன்மை உணவாகத் திகழ்கிறது! ஒமேகா 3 கொழுப்பு அமிலச்சத்து உங்கள் தலையின் மேற்பகுதியை என்றென்றும் ஈரப்பசையுடன் வளமாகத்திகழச்செய்து தலைமுடி செழிப்பாக வளர உதவுகிறது.
* நாள் முழுக்க வேலை செய்தால் கண்கள் சோர்ந்து போகும்.அப்போது வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட்டினை உட்கொள்ளுங்கள். சோர்வு நீங்கி கண்கள் புத்தொளி பெறும். சுறுசுறுப்படைவீர்கள்!
* கந்தகம் மற்றும் சிலிகான் சத்து நிறைந்த பிராக்கோலி இலைகள் நக வளர்ச்சிக்கு மட்டுமன்றி மன அமைதிக்கும் உகந்தது. பிராக்கோலி மர இலைகள் கிடைக்காவிடில் அதற்கு இணையான காலிபிளவர் மற்றும் பீட்ரூட் இலைகள் நக வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன.
* வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கால்சியம் சத்து நிறைந்த பச்சை கீரை வகைகள், பாஸ்பரஸ் சத்து நிறைந்த பூசணி விதை போன்றவைகளும் அழகிய உணவுப் பட்டியலில் இடம் பெறுகிறது. அவை எலும்பு வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, ஆஸ்ட்டியோபீனியா என்ற எலும்புத்தளர்ச்சி மற்றும் வலுவின்மை என்கிற நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இந்த உணவு வகைகளை நம் அன்றாட உணவில் அளவோடு உட்கொண்டால் அழகாக வாழலாம்!

சாதனைப் பெண்கள்:இலங்கை வீராங்கனையை தோற்கடித்த பாரதி!



















அமைதி தவழும் வீடு. சதுரங்கப் பலகையில் காய்களை அடுக்கி வைத்து விளையாடிக் 

கொண்டிருக்கிறார், பாரதி. இவர் ஒரு சாதனைப் பெண். தேசிய சப்-ஜூனியர் சாம்பியனாகத் திகழ்ந்தவர். சமீபத்தில் 
இலங்கையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திரும்பியிருப்பவர். பாரதியின் கவனத்தை சதுரங்கப் பலகையில் இருந்து நம் பக்கம் திருப்பி, பேசினோம்...
இலங்கை போட்டி
இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஆசிய ஜூனியர் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இந்தியா, இலங்கை, மலேசியா, மாலத்தீவுகள், உஸ்பெக்கிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றோம். இந்தியாவில் இருந்து சென்ற மகளிர் அணியில் 5 பேர் இடம்பெற்றிருந்தோம். அதில், நான், சரண்யா, பொன்கிருத்திகா ஆகிய 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கமே நிலவியது. இந்திய வீராங்கனைகளுக்குச் சவாலாக இருந்தவர்கள் சக இந்திய வீராங்கனைகள்தான். நான், பஸ்நாயகே என்ற இலங்கை வீராங்கனையை வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினேன்.
இறுதிச் சுற்றில், கோவாவைச் சேர்ந்த மகளிர் கிராண்ட் மாஸ்டர் பக்தி குல்கர்னியைச் சந்தித்தேன். ஏறக்குறையை மூன்று சுற்றுக்கு முன்பே அவருக்குத் தங்கப் பதக்கம் உறுதியாகியிருந்தது. அவருடன் நான்கு மணி நேரம் போராடித் தோற்ற நான், வெள்ளிப் பதக்கம் பெற்றேன். வெற்றியை நழுவவிட்ட போதும், சிறந்த வீராங்கனையிடம் தோற்ற திருப்தி எனக்கு இருக்கிறது.
'ஸ்பெஷல்' வெற்றி
இலங்கையில் நான் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்க ஒன்று. இப்போட்டியில், 18 வயதே நிரம்பிய நான், 20 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகளுடன் போட்டியிட்டு இவ்வெற்றியைப் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் இதைவிட முக்கியமானதாகக் கருதுவது, கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சதுரங்கப் போட்டியில் நான்காவது இடம்பெற்றதை.
சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற அப்போட்டி, மிகவும் சவாலானதாக இருந்தது. இறுதிச் சுற்றில் இதே பக்தி குல்கர்னியுடன் 'டிரா' செய்த நான், நான்காவது இடம் பெற்றேன். பதக்கம் வெல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை என்றபோதும், அப்போட்டியில் எனது செயல்பாடு சிறப்பாக இருந்ததாகக் கருதுகிறேன்.
தேசிய பட்டம்
நான் கடந்த 2008-ம் ஆண்டு தேசிய மகளிர் சப்-ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்றேன். கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில் நான் மேற்கு வங்காள வீராங்கனை சுகன்யா தத்தாவை எதிர்கொண்டு வென்றது மறக்க முடியாதது. கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடைபெற்ற, முன்னணி வீராங்கனைகள் பங்குபெறும் பெருமைக்குரிய தேசிய பிரீமியர் 'ஏ' போட்டியில் 10-வது இடம் பெற்றதையும் சிறப்பானதாகக் கருதுகிறேன். செஸ்சை பொறுத்தவரை சிறு சறுக்கலும் எங்கோ பாதாளத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். கோப்பை வெல்லும் நிலையில் இருந்து கிடுகிடுவென்று கீழே போய்விடுவோம். அந்த வகையில், நான் மேற்கூறிய சில போட்டிகளில் பட்டம் வெல்லவில்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் பெருமையாக உணர்ந்திருக்கிறேன்.
'சென்டிமென்டும்', பலவீனமும்
செஸ் விளையாட்டின் நிலையற்ற தன்மை காரணமாக இதை விளையாடுவோருக்கு நிறைய 'சென்டிமென்ட்' உண்டு. நானும் எங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியை ராசியானதாக கருதுகிறேன். குறிப்பிட்ட ஆடையை அணிந்து சென்றால் நன்றாக ஆட முடியும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், வீம்புக்காகவே 'ராசியில்லாத' ஆடையை 'தில்'லாக அணிந்து சென்று வென்றதும் நடந்திருக்கின்றன. முக்கியமான போட்டிகளில் இறுதிச் சுற்றில் நெருக்கடியை உணர்ந்து வெற்றியை நழுவ விடுவது எனது பலவீனமாக இருக்கிறது. அதனாலேயே, பல குறிப்பிடத்தக்க பட்டங்களைக் கைநழுவ விட்டிருக்கிறேன். இனிமேல், முடிவு பற்றி யோசிக்காமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தி ஆடணும் என்று உறுதி கொண்டிருக்கிறேன்.

படிப்பில் ஜொலிக்கிறேன்
விளையாட்டு, படிப்பு இரண்டிலும் சிறப்பாகச் செயல்படும் மாணவர்கள் கொஞ்சம் குறைவுதான். அந்தவகையில் நான் இவை இரண்டிலுமே ஜொலிப்பதாக நினைக்கிறேன். 9-ம் வகுப்பு வரை பள்ளியில் முதல் மாணவி நான்தான். இந்தாண்டு பிளஸ் 2-வில் 96.3 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். தொடர்ந்து, படிப்பு, செஸ் இரண்டையும் 'பேலன்ஸ்' செய்ய முடியும் என்று நம்புகிறேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து, 'நானோ டெக்னாலஜி' பயிலத் தீர்மானித்திருக்கிறேன்.
தமிழகத்தின் ஆதிக்கம்
சதுரங்கக் களத்தில் தேசிய, சர்வதேச நிலையில் தமிழக வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதற்கு, தமிழக சதுரங்கக் கழகத்தின் ஆதரவு, ஊக்குவிப்பு, சிறந்த பயிற்சியாளர்கள், நல்ல வீரர், வீராங்கனைகளுடன் அடிக்கடி மோதும் வாய்ப்பு, சர்வதேச அளவில் சாதிப்போரால் கிடைக்கும் ஊக்கம் ஆகியவை முக்கியக் காரணம். தனிப்பட்ட முறையில், நான் படித்த முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் அதன் தலைவர் முத்துராமலிங்கம் அளித்த பொருளாதார உதவியுடனான ஊக்கம், சதுரங்கப் பொறுப்பாளர் ராஜ்மோகன் அளித்த உறுதுணை, நான் தற்போது பயிற்சி பெறும் 'செஸ் குருகுல்'லின் பயிற்சியாளர்கள் ஆர்.பி. ரமேஷ், கணேஷ், கூடியமட்டும் என்னுடன் போட்டிகளுக்கு வரும் எனது பெற்றோர் (அப்பா- ராமராஜ், அம்மா- உஷா) ஆகியோரே எனது வெற்றிகளின் பின்னணி.
ஸ்கேட்டிங், ஸ்விம்மிங்...
சிறுவயதில் துறுதுறுவென்று திரிந்து கொண்டிருந்த என்னை ஓரிடத்தில் உட்கார வைப்பதற்காகத்தான் எனக்குப் பெற்றோர் சதுரங்கம் கற்றுக் கொடுத்தனர். செஸ் தவிர, ஸ்கேட்டிங், நீச்சல், பரத நாட்டியம் கற்றேன். ஆனால் இவையெல்லாம் காலப்போக்கில் விடைபெற்றுவிட, செஸ் மட்டும் என்னுடன் தொடர்கிறது. எனக்கு 'ரிலாக்ஸ்' அளிக்கும் விஷயமாக இசை மட்டும் மாறவில்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது தொடங்கிய எனது சதுரங்கப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிட்டியிருப்பதாகக் கருதுகிறேன். மற்றபடி, சதுரங்கத்துக்காக நான் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தபோதிலும் அதில் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை.
சதுரங்கத்தில் தொடர் கவனம்
சதுரங்கத்தில், டபிள்யூ.ஐ.எம்., டபிள்யூ.ஜி.எம். என்று நான் எட்ட வேண்டிய படிகள் இருக்கின்றன. இரண்டு, மூன்றாண்டுகளில் இவற்றைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே எனது சதுரங்கப் பயணம் தொடர்கிறது. பயிற்சியாளர்கள், பெற்றோர், எனது நலம் விரும்பிகள் சந்தோஷம் அடையும் வகையில் புதிய உயரங்களை எட்டுவேன்.
பாரதியின் 'பளீர்' புன்னகையில் நம்பிக்கை மறைந்திருக்கிறது!




About Me

My photo
srilanka, Sri Lanka
i'm jinothini from jaffna...